0

ரி.புவன்ஷன் பிறந்தநாள்வாழ்த்து 10.02.2017

திருகோணமலைவாழ்.கவிச்சுடர்சிவரமணி அவர்களின் மகன் தனது ஏழாவது அகவையினை கொண்டாடும் தருணம் இவரை.அப்பா,அம்மா, ..அண்ணா டிதுர்ஷன், புதுக்குடியிருப்பு.கண்ணன் மாமா, மாமி,.யாழினி, மகிழினி, மச்சாளவை.,பெரியம்மா,பெரியப்பா, சங்கத்தார்வயல் செந்தூர, ரெசி, உற்றார் , உறவினர் வாழ்க வாழ்கவென..வாழ்த்துகின்றனர். இவர் பல்லாண்டு வாழ வாழ்த்துவோமாக



(ரி.புவன்ஷன்  தாயார் சிவரமணி கவி  எழுதிய கவிதை இணைக்கப்பட்டுள்ளது) 
 
ஏழாவது அகவையில் கால் பதிக்கும்
எனது மகனை வாழ்த்தலாமே..!!

அன்பிலே நல் பண்பிலே
இவன் ஆளுமை கொள்ளவேண்டும்
ஆசிகள் ஆயிரம்
இவனுக்கு என்றுமே கிட்ட வேண்டும்
இன்பம் துன்பம் சகித்திட
இவனுக்கு சக்தியும் வேண்டும்
ஈகையோடு கூட கொஞ்சம்
இரக்கமும் இருக்க வேண்டும்
உண்மைதனை உரைத்திடும்
உள்ளமது வேண்டும்
ஊட்டி வளர்த்தவரை நன்றி
மறவாதிருத்தல் வேண்டும்
எண்ணும் எழுத்தும் கண்ணென
கற்றிட தெரிய வேண்டும்
ஏற்றமும் இறக்கமும் வாழ்வில்
சமநிலை புரிய வேண்டும்
ஐயம் என்பது மனதில்
அகற்றியே வாழ வேண்டும்
ஒற்றுமைக்காக ஒன்றுபட்டிருக்க
வேண்டும்
ஓதுவது ஒழியேல் கற்றபடி
ஒழுக வேண்டும்
ஔவியம் பேசாமை நன்கு
புரிந்து நடத்தல் வேண்டும்
உயிர் எழுத்தாய் உயர்ந்து வாழ்வேண்டும்
மெய்யெழுத்தாய் கலந்து மகிழவேண்டும்
உயிர்மெய்யாய் எனது மகன்
உலகம் போற்ற வேண்டும்
அதற்குத்தானே உங்கள்
ஆசிகள் வேண்டும் வேண்டும்../!!